• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில், ஆன்லைன் மூலம் மீன் விற்பனை

May 25, 2017 தண்டோரா குழு

சென்னையில், ஆன்லைன் மூலம் மீன் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதல் விற்பனையை,நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,

” ஆன்லைன் மூலம் மீன் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்துக்குள் மீன்கள் டெலிவரி செய்யப்படும். மீன்கள் மட்டுமல்ல, மீன்கள் சார்ந்த மற்ற பொருள்களை, டெலிபோன் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். தமிழக மீனவர்களிடம் இருந்துதான் மீன்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

www.meengal.com என்ற தளத்தில் ஆன்லைன் மூலம் மீன்களை வாங்கலாம்; 044-24956896 என்ற எண்ணிலும் மீன்களை ஆர்டர் செய்யலாம்.ஆன்லைன் விற்பனைக்காக ரூ.10 லட்சத்தில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

5 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள பகுதிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.500-க்கு ஆர்டர் தரலாம். இதற்கு போக்குவரத்து கட்டணமாக, ரூ.35 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இத்திட்டம் விரைவில், மற்ற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும்.”

இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.

மேலும் படிக்க