கோவை இருகூர் அத்தப்பக்கவுண்டன்புதூர் இடையே செயல்படும் மதுபானக் கடையை மூடக்கோரி இருநூறுக்கும் மேற்பட்டோர் இரண்டு மணிநேரமாக நேற்று(மே – 24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் ஆணைய அடுத்து தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை ஓரம் உள்ள மதுபானக் கடைகள் மூடப்பட்டன.
இந்நிலையில் மூடப்பட்ட மதுபானக் கடைகளை ஊருக்குள்ளும், கோவில் மற்றும் பள்ளி கல்லூரிக்கு அருகிலும் திறக்க அரசு முயற்சிப்பதை எதிர்த்து பொதுமக்கள் தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர்.
இதனிடையே கோவை இருகூர் அத்தப்பக்கவுண்டன்புதூரில் உள்ள கடை எண் 2266 மதுபானக் கடையை அகற்றக்கோரி, அப்பகுதியில் இருநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுபானக் கடைக்கு எதிராக கண்டன கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி இல்லாததால் மதுபானக்கடைக்கு அருகேயுள்ள திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு குடித்து விட்டு வருபவர்கள் பெண்களுக்கு தொந்தரவு செய்வதாகவும்,இதனால் பள்ளி , கல்லூரி ,மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கூறி மூன்று முறை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு