• Download mobile app
17 Oct 2025, FridayEdition - 3537
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ட்விட்மூலம் கடத்தப்பட்ட குழந்தைகள் மீட்பு

May 24, 2017 தண்டோரா குழு

ஒடிசா மாநிலத்தில் ஒருவர் அனுப்பிய ட்விட்டர் பதிவால் கொத்தடிமை வேலைக்கு கடத்தப்பட்ட நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டருக்கு,

“பர்ஹாம்பூரிருந்து சம்பல்பூர் செல்லும் பேருந்து ஒன்றில் நான்கு சிறுவர்களை வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்படுகின்றனர். அனேகமாக, அவர்கள் கொத்தடிமைகளாக கொண்டு செல்லப்படலாம் என்று அப்பேருந்தில் பயணம் செய்த அமித் நந்தா என்பவர்,அம்மாநில முதல்வர்
அலுவலகத்தின் முகவரிக்கு ட்விட்டர் மூலம் புகார் அனுப்பினார்.

அந்த புகாரைக் கண்ட அதிகாரிகள், அதை விளையாட்டாக எண்ணாமல், உடனே காவல்துறையினருக்கு தகவல் தந்தனர். பர்ஹாம்பூரிருந்து சம்பல்பூர் செல்லும் அனைத்து பேருந்துகளையும் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது, புல்பானி என்னும் இடத்தில் கடத்தப்பட்ட நான்கு சிறுவர்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். அதோடு குழந்தைக் கடத்தலில் ஈடுப்பட்ட மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் குழந்தைகளைக் கடத்தி சென்றதுக் குறித்து புகார் தெரிவித்த அமித் நந்தாவையும்,குழந்தைகளை காப்பற்றிய காவல்துறையினருக்கும் நவீன் பட்நாயக் தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

மேலும் படிக்க