• Download mobile app
17 Oct 2025, FridayEdition - 3537
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இந்தியர் மரணம்

May 24, 2017 தண்டோரா குழு

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த பின்னர், கீழே இறங்கும்போது காணாமல் போன மலையேற்ற வீரர் உயிரிழந்துள்ளார்.

உத்தர்பிரதேஷ மாநிலத்தின் மோரதாபாத் நகரை சேர்ந்தவர் ரவி குமார்(27). இவர் 8,848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தை சனிக்கிழமை(மே 2௦) மதியம் 1.28 மணியளவில் வெற்றிகரமாக ஏறியுள்ளார்.

பின்னர், அங்கிருந்து கீழே இறங்கும்போது, 8,2௦௦ மீட்டர் உயரத்திலுள்ள பால்கனி என்னும் இடத்திற்கு வரும்போது சுமார் 15௦ முதல் 2௦௦ மீட்டர் ஆழத்தில் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். அவருடைய வழிக்காட்டி லப்கா வோங்க்யா ஷெர்பா என்பவரை ஆபத்தான நிலையிலிருந்து மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், எவரெஸ்ட் மலை ஏற்றத்தின்போது, 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கர் ஒருவரும், ஸ்லோவேகிய நாட்டைச் சேர்ந்த ஒருவரும், ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஒருவரும், இன்னும் அடையாளம் கண்டுபிடிக்காத ஒருவரும் ஞாயிற்றுக்கிழமை எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழந்துள்ளனர்.

“காலநிலை மோசமாக இருப்பதாலும், 24 மணிநேரத்திற்கு மேலாக ரவி காணாமற்போனதாலும், அவர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை” என்று நேபால் மலையேறுதல் சங்க தலைவர், அங் ஷேரிங் ஷெர்பா கூறினார்.

1953ம் ஆண்டு எவரெஸ்ட் மலையேற்றம் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 3௦௦ பேர் உயிரழந்துள்ளனர். மேலும், சுமார் 2௦௦ பேருடைய இறந்த உடல்கள் அங்கு இருப்பதாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க