• Download mobile app
05 Sep 2026, SaturdayEdition - 3860
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமரை சந்தித்தது ஏன்? முதல்வர் பழனிசாமி விளக்கம்

May 24, 2017 தண்டோரா குழு

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இன்று நேரில் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

பிரதமர் மோடியுடன் அரசியல் ரீதியாக பேசவில்லை. தமிழகத்தின் திட்டங்கள் குறித்து கோரிக்கை விடுத்தோம். தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி தர நிதி ஒதுக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைபடுத்தும் குழு அமைக்க வேண்டும்.

இலங்கை வசமுள்ள படகுகள், மீனவர்களை விடுவிக்க வேண்டும்.மத்திய அரசு திட்டங்களை நிறைவேற்றியதற்காக வழங்க வேண்டி நிலுவை தொகை ரூ.17 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளதாக கூறினார்.

மேலும், சட்டசபையில் வைக்கப்பட உள்ள ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க வேண்டும் எனவும், டிசம்பர் மாதம் நடைபெறும் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்தாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பிரதமரை அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை.அரசு ரீதியாக தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து வலியுறுத்தினேன்.

மேலும் படிக்க