• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சவூதியில் இந்தியா குறித்து பேசிய டிரம்ப் !

May 22, 2017 தண்டோரா குழு

சவூதி அரேபியாவில் அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் இந்தியா குறித்தும் தீவிரவாதம் குறித்தும் பேசியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன்னுடைய முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை சவுதி அரேபியாவிலிருந்து துவக்கியுள்ளார். அங்கு நடைபெற்ற 50 முஸ்லிம் நாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாட்டில் தீவிரவாதம் குறித்து தனது முதல் உரையை நிகழ்த்தினார் டிரம்ப்.

அப்போது பேசிய அவர்,

தீவிரவாதம் என்பது நன்மைக்கும் தீமைக்குமான போர். இது மேற்கு உலக நாடுகளுக்கும் இஸ்லாத்துக்கும் இடையேயான பிரச்சனை அல்ல. குறிப்பாக, தீவிரவாதம் பலதரப்பட்ட நம்பிக்கைகளுக்கும் பிரிவுகளுக்கும் நாகரிகங்களுக்குமான போர் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாகரிகம் அறியாத மனிதர்கள், மனித உயிரை மதிக்காமல் நிகழ்த்தும் கொடுமைகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.

மேலும், இந்தியா தீவிரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடு என்று குறிப்பிட்டார்.உலகில் உள்ள எந்தவொரு நாடும், தங்கள் மண்ணில் தீவிரவாதத்தை வளரவிடக்கூடாது. ஒவ்வொரு நாடும் தங்கள் மண்ணில் தீவிரவாதத்தை வளரவிடவில்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றார்.

மேலும் படிக்க