• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“ரஜினிகாந்த் ஒரு வியாபாரி” – செல்லூர் ராஜூ

May 22, 2017 தண்டோரா குழு

நடிகர் ரஜினிகாந்த் ஒரு வியாபாரி இன்றைக்கு ஒன்று பேசுவார், நாளைக்கு ஒன்று பேசுவார் என தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் சில கருத்துகளை வெளியிட்டார். அது அவர் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.இதனிடையே ரஜினிகாந்த் ஒரு வியாபாரி என அமைச்சர் செல்லூர் ராஜு விமர்ச்சித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

தமிழகத்தில் எம்.ஜி.ஆர்-ருக்குப் பிறகு கட்சி தொடங்கியவர்கள் கதி என்னாச்சு என்பதை அனைவரும் அறிவார்கள்.

ரஜினி ரசிகர்கள் மத்தியில் கூறியதை பற்றியெல்லாம் கவலைக்கொள்ளத் தேவையில்லை. தமிழகத்தில் சிஸ்டம் எதுவும் ரஜினி சொன்னது போல் கெட்டுப்போகவில்லை.

நடிகர் ரஜினிகாந்த் ஒரு வியாபாரி, இன்றைக்கு ஒன்று பேசுவார், நாளைக்கு ஒன்று பேசுவார். தற்போது நடிகர்கள் பின்னால் போவதை தமிழக மக்கள் தவிர்த்துவிட்டனர்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க