• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இனி பேஸ்புக்கிலே உணவை ஆர்டர் செய்யலாம்

May 20, 2017 தண்டோரா குழு

பேஸ்புக் மூலம் உணவுக்கு ஆர்டர் செய்யும் புதிய வசதியை பேஸ்புக் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சமூகவலைதளங்களில் மிகவும் முக்கியமான வலைதளம் பேஸ்புக் . உலகம் முழுவதும் 200 கோடி பேர் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகிறனர்.பேஸ்புக் நிறுவனமும் பயனாளர்களை கவரும் வகையில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. பேஸ்புக் ஆடரிங் என்ற புதிய வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் அமெரிக்காவில் வரும் அக்டோபர் முதல் உணவுக்கு ஆர்டர் செய்யும் புதிய வசதியை நடைமுறைப்படுத்த உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.மேலும், பேஸ்புக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் உணவகங்களிடம் இருந்து உணவை ஆர்டர் செய்து வீட்டிற்கே வரவழைக்கலாம் என்று பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக் ஆர்டரிங் என்ற இந்த வசதி மூலம் உணவகங்களின் இணையதளம் மற்றும் மொபைல் அப்ளிகேசனை பயன்படுத்தாமல், பேஸ்புக் மூலமே உணவுக்கு ஆர்டர் செய்யலாம்.

அமெரிக்காவில் துவங்கப்படும் இந்த புதிய வசதி பின்னர் உலகமெங்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க