• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

என்னை தமிழனா என சமூக வளைத்தளங்களில் விமர்சிப்பது வருத்தமளிக்கிறது – ரஜினி

May 19, 2017 தண்டோரா குழு

ரஜினி தமிழனா என சமூக வளைத்தளங்களில் விமர்சிப்பது வருத்தமளிக்கிறது என ரஜினி கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனது ரசிகர்களை சந்தித்து மாவட்ட வாரியாக அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். கடைசி நாளான இன்று ரசிகர்களை சந்தித்த ரஜினி பரபரப்பாக பேசினார்.

அப்போது பேசிய அவர்,

எனக்கு 67 வயதாகிறது, 23 ஆண்டு தான் கர்நாடகாவில் இருந்தேன் எஞ்சிய 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் உங்கள் கூடவே வளர்ந்தேன். கர்நாடகத்தில் இருந்து மாராட்டியராக வந்திருந்தாலும் பேரும் புகழும் அள்ளிக்கொடுத்து என்னை தமிழனாக்கி விட்டீர்கள், அதனால் நான் பச்சைத் தமிழன்”

என்னை எங்கேயாவது போ என்று வெளியே தூக்கிப் போட்டால் இமயமலையில் தான் வீழ்வேனே தவிர வேறு மாநிலத்திற்கு போக மாட்டேன். ஆனால் ரஜினிகாந்த் தான் தமிழனா என்று சமூக வலைதளங்கள் மற்றும் டுவிட்டரில் வெளியாகும் தரமற்ற விமர்சனங்கள் வருத்தமளிக்கிறது.

திருமாவளவன், சீமான், அன்புமணி, ஸ்டாலின் போன்ற நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள்.ஜனநாயகமே கெட்டுப்போய் உள்ளது. மக்களின் சிந்தனையை மாற்றினால் மட்டுமே நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். அனைவருக்கும் வேலை உள்ளது ஊருக்கு போய் வேலையை பாருங்கள் போர் வரும் போது பார்த்துக் கொள்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க