• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தம்.

May 3, 2016 theyeshivaworld.com

இன்று மக்கள் குறுஞ்செய்திகளை பகிர்ந்துகொள்ள உபயோகிக்கும் வாட்ஸ்அப் முறை மிகவும் பிரபலம். இதை வயது வித்தியாசமின்றி அனைவராலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

செல் போன் வாங்கச் செல்லும் போது முதலில் கேட்கும் கேள்வி, அதில் வாட்ஸ்ஆப் இருக்கிறதா? அப்படி இல்லை என்றால் கைப்பேசி வாங்கியவுடன் இதை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விடுகின்றனர்.

மக்களின் வாழ்கையில் வாட்ஸ்ஆப் இன்றியமையாத ஒன்றாகி விட்டது.

பல நாடுகள் இதை உபயோகித்து வந்தாலும், வாட்ஸ்ஆப்பால் பிரேசில் நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுகின்றது என்பதால் அதற்குத் தடை விதித்துள்ளனர்.

மேலும், ப்ரேசில் நாட்டில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நீதிப் போரின் விளைவாக வாட்ஸ்அப்பை உபயோகிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ப்ரேசில் நாட்டின் வடகிழக்கு மாநிலமான செர்கிபே நீதிபதி திங்கள்கிழமை மாலை முதல் நாடு முழுவதும் 72 மணி நேரம் இந்தச் சேவையை நிறுத்த வேண்டும் என்று அவர் கட்டளையிட்டார்.

லத்தீன் அமெரிக்காவில் பேஸ்புக் நிறுவனத்தின் மூத்த பிரதிநிதியான டியாகோ டீசோடன் என்பவர்,

போதை மருந்து கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்ற விசாரணைக்கு ஒத்துழைக்கத் தவறியதற்காக சண் பாலோ நகரத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

அவர் இந்த விசாரணை சம்பந்தமாக வாட்ஸ்ஆப் உபயோகிப்பவர்களைக் குறித்து தகவலைச் சட்ட அமலாக்கத் துறைக்கு கொடுக்கத் தவறியதற்காக ஒரு இரவு சிறையில் இருந்தார்.

மேலும் படிக்க