• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் கர்ப்பிணி பெண் மர்ம மரணம் !

May 18, 2017 தண்டோரா குழு

திருப்பூரில் திருமணமான ஒரே ஆண்டில் கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் மரணம். கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை.

திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகரை அடுத்த தியாகி குமரன் நகரை சேர்ந்தவர் நரேஷ் குமார். இவருக்கும் மணப்பாறையை சேர்ந்த நர்சாக பணியாற்றி வந்த யோகலட்சுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இதனிடையே திருமணத்திற்குப் பிறகு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு திருப்பூரில் தனது கணவர் குடும்பத்தாருடன் யோகலட்சுமி வசித்து வந்தார். 6 மாத கர்ப்பிணியாக இருந்த யோகலட்சுமிக்கும் கணவர் நரேஷ் குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை திடீரென யோகலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக கூறி யோகலட்சுமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனிடையே யோகலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

யோகலட்சுமியின் உடலில் காயங்கள் இருப்பதை கண்ட மருத்துவர்கள் இது குறித்து திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் யோகலட்சுமியின் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இந்த மர்ம மரணம் குறித்து ஆர்.டி.ஓ முன்னிலையில் விசாரணை நடைபெற உள்ளது. விசாரணை முடிவில் யோகலட்சுமியின் மர்ம மரணம் குறித்து தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.

திருமணமான ஒரே ஆண்டில் 6 மாத கர்ப்பிணிப்பெண் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க