• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காதலனை துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற காதலி

May 17, 2017 தண்டோரா குழு

உ.பி,யில் தன்னை காதலித்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த வாலிபரை இளம்பெண் துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டம் மவுதாஹா நகரை சேர்ந்தவர் அசோக் யாதவ். இவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அங்கு பணிபுரியும் இளம்பெண்ணுக்கும் அசோக்கிற்கும் இடையே நீண்ட நாளாக காதல் இருந்துள்ளது.ஆனால், திடீரென அசோக் வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயதார்த்தம் செய்துகொண்டிருக்கிறார். அதிலிருந்து தனது காதலியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில்,நேற்று முன்தினம் அசோக்கிற்கு திருமண சடங்குகள் நடந்து வந்துள்ளது. அப்போது துப்பாக்கியுடன் அங்கு வந்த அசோக்கின் காதலி தன்னை காதலித்து விட்டு மற்றொரு பெண்ணை எப்படி திருமணம் செய்யலாம் என கல்யாணத்தை நிறுத்தினார். மேலும்,துப்பாக்கி முனையில் அசோக்கை சட்டை காலரை பிடித்து இழுத்து காரில் கடத்தி சென்றுள்ளார். இது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசாரின் விசாரணையில்,

இருவரும் சேர்ந்து திட்டமிட்டே இந்த நாடகத்தை நடத்தியிருப்பார்கள். இல்லையென்றால், அசோக் எப்படி எதிர்ப்பே தெரிவிக்காமல் உடன் சென்றிருப்பார்?” என்று சந்தேகம் தெரவித்துள்ளனர். மேலும், ஏராளமான மக்கள் இருக்கும் போது எவ்வாறு பெண் ஒருவர் கடத்தி செல்ல முடியும். யாரும் அவரை தடுக்க முயற்சி செய்யவில்லையா? அசோக், தானாகவே, அந்த பெண்ணுடன் சென்றுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க