• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கைகளை மட்டும் பயன்படுத்தி சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்கும் இளைஞர்

May 17, 2017 தண்டோரா குழு

விபத்து ஒன்றில் கால்களை இழந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய இரண்டு கைகளை மட்டும் பயன்படுத்தி சைக்கிள் மாரத்தான் பந்தயத்தில் பங்கேற்கவுள்ளார்.

அமெரிக்க நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள எட்மன்ட்ஸ் பகுதியை சேர்ந்த ஆண்ட்ரே காஜ்லிச்
(37), 14 ஆண்டுகளுக்கு முன், செக்கோஸ்லோவேகியா நாட்டின் தலைநகர் பிராகாவில் படித்துக்கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய நண்பர்களுடன் விருந்து ஒன்றுக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பும்போது நடந்த விபத்தில் இரண்டு கால்களையும் இழந்துவிட்டார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் பல சிகிச்சைகளை அளித்தனர். சிகிச்சைக்கு பிறகு, அவரால் சரியாக உட்கார்ந்து கொள்ள முடியுமென்று டாக்டர்கள் நம்பவில்லை.இந்நிலையில் அவர் எழுந்து உட்காருவதை கண்ட மருத்துவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால், 2௦11ம் ஆண்டு தந்தை இழந்த ஆண்ட்ரே, கிரேக்ளிஸ்ட் என்னும் இடத்திலிருந்து வாங்கிய சக்கரை நாற்காலியை பயன்படுத்தி சைக்கிள் மாரத்தான் போட்டியில் கலந்துகொள்வது என்று முடிவு செய்தார். இந்த போட்டிக்காக அவர் ஒவ்வொரு வார கடைசியிலும் சுமார் 5௦௦ மைல் பயணம் செய்து தனது பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

தன்னுடைய கைகளை மட்டும் பயன்படுத்தி ‘ரேஸ் அச்ராஸ் அமெரிக்கா’ என்னும் போட்டியில் கலந்துக்கொள்ளும் முதல் மாற்றுதிறனாளி ஆவார். ஜூன் 14ம் தேதி தொடங்கி, 12 நாட்களுக்குள் கலிபோர்னியாவிலிருந்து மேரிலாந்து வரை 3௦௦௦ மைல் ஆண்ட்ரே பயணிக்க வேண்டும்.

“போட்டியில் வெற்றிபெருவதா இல்லையையா? என்பது முக்கியமில்லை. இந்த போட்டியில் பங்கேற்பதுதான் என்னுடைய நோக்கம்” என்று ஆண்ட்ரே தெரிவித்தார்.

மேலும் படிக்க