• Download mobile app
19 Oct 2025, SundayEdition - 3539
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ப.சிதம்பரம் வீட்டில் சோதனை : சிபிஐ விளக்கம்

May 16, 2017 தண்டோரா குழு

சட்ட ரீதியிலான முறையிலேயே ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்ததாக சிபிஐ இணை இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று காலை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், சோதனை நடத்தியது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரி வினீத் விநாயக் செய்தியாளர்களுக்கு சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

ஐ.என்.எக்ஸ். நிறுவனம் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ஐ.என்.எக்ஸ்.நிறுவனத்தின் பங்குதாரர் கார்த்தி. இவர் அந்நிறுவனத்திற்கு சலுகை காட்டியுள்ளார்.ஐ.என்.எக்ஸ்.நிறுவனத்தின் உரிமையை வேறு நிறுவனத்திற்கு மாற்றம் செய்துள்ளனர்.மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் ஐ.என்.எக்ஸ்.நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன. சி.பி.ஐ. சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.

சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் வீடு,அலுவலகங்களில் சட்டரீதியான வழிகளிலேயே சோதனை நடக்கிறது.சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.சோதனையில் அரசியல் குறுக்கீடு எதுவும் இல்லை.

இவ்வாறு வினீத் விநாயக்கூறியுள்ளார்.

மேலும் படிக்க