அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் வீட்டில் ஏற்பட்ட விபத்தின் போது, தன்னுடைய உயிரை காப்பாற்றிய ‘சிறி’(SIRI) என்னும் மொபைல் செயலிக்கு நன்றி தெரவித்துள்ளார்.
அமெரிக்க நாட்டின் நியூ ஹாம்ஸ்ஹையரைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் பௌச்சர். இவர் விச்கோசின் மாநிலத்தின் வில்மாட் நகரிலுள்ள அவருடைய தாயார் வசித்த வீட்டிற்க்கு சென்றுள்ளார்.
வீட்டிற்கு உள்ளே சென்ற அவர், சுவிட்சை போட்டவுடன், வீடு தீப்பற்றியது. அந்த விபத்தில் கிறிஸ்டோபரின் முகமும் கைகளும் மோசமாக எரிந்துவிட்டது. அவருடைய கைபேசியை அவர் தனது கைகளால் பயன்படுத்தி அவசர உதவிக்கு அழைப்பு விடுக்க முடியவில்லை. அதன் பிறகு ஐபோன் “சிறி(SIRI)” செயலியை பயன்படுத்தி அவசர உதவி எண் 911க்கு தகவல் அளித்துள்ளார்.
தகவல் பெற்ற மீட்புப்பணி அதிகரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த கிறிஸ்டோபரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
தன்னுடைய சிகிச்சைக்கு பிறகு, சமையல் பணியை தொடரவும், தனது பண்ணையை கவனித்துக்கொள்ள போவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆபத்து காலத்தில் உதவிய சிறி செயலிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு