• Download mobile app
02 Dec 2025, TuesdayEdition - 3583
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“Florence Nightingale” விருது பெற்ற ஓடிஷா செவிலியர்

May 16, 2017 தண்டோரா குழு

ஓடிஸா மாநிலத்தை சேர்ந்த செவிலியர் ஒருவருக்கு “Florence Nightingale” விருதினை இந்திய குடியரசு தலைவர் வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12ம் தேதி உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. 19ம் நூற்றாண்டை சேர்ந்த “Florence Nightingale” என்னும் சிறந்த செவிலியர் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படுகிறது.

அந்தவகையில், இந்தாண்டின் சிறந்த செவலியாருக்கான விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை (மே 12) குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. அந்த விழாவின்போது, ஓடிஸா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ண குமாரி(55) என்பவருக்கு “Florence Nightingale” விருதினை இந்தியக் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

ஓடிஸா மாநிலத்தின் குக்குடஹந்தி மாவட்டத்திலுள்ள சமூக சுகாதார மையத்தில் கடந்த 18 ஆண்டுகளாக பணியாற்றி வரும் கிருஷ்ண குமாரி,குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல், பெண்கள் நலத்திட்டம், அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் பிரசவ அறை நிர்வாகம் ஆகிய பணிகளை செய்து வந்தார். “இந்த விருதைப் பெற்றுகொண்டதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு கிடைத்த இந்த பரிசு தொகையை அநாதை குழந்தைகளின் கல்விக்கு தானமாக தரவுள்ளேன்.

கஞ்சம் பகுதியின் தலைமை மாவட்ட மருத்துவ அலுவலர், மனோஜ் குமார் கூறுகையில்,

“கிருஷ்ண குமாரி மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரி. அவருடைய பணி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று மற்றவர்களை ஊக்கப்படுத்தும். இந்த விருது பெற்ற அவரை மனமார வாழ்த்துகிறேன்” என்றார்.

மேலும் படிக்க