• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் எஸ். ராமசுவாமி மறைவு

May 15, 2017

புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.ராமசுவாமி(80) திங்கள்கிழமை(மே 15) தனது இல்லத்தில் காலமானார்.

எஸ்.ராமசாமி சில நாட்களாகவே உடல்நிலை குன்றியவராக இருந்த அவர் திங்கள்கிழமை காலமானார் என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அவருடைய மாணவ பருவத்திலிருந்து திமுக கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்வை தொடங்கினார். 1969ம் ஆண்டு முதல் 1973ம் ஆண்டு வரை திமுக-சிபிஐ கூட்டனி அமைச்சகத்தில் உள்துறை அமைச்சராக பணியாற்றினார். 1973ம் ஆண்டு அதிமுக கட்சியில் அவர் சேர்ந்தார். 1974ம் ஆண்டு அதிமுக-சிபிஐ கூட்டணியில் புதுச்சேரி முதலைமைச்சராக அவர் பதவியேற்றார்.

1977ம் ஆண்டு அதிமுக அரசு ஆட்சி செய்தபோது புதுச்சேரியில் ஓராண்டுக்கு மேலாக முதல்வராக இருந்தார். 1985 மற்றும் 199௦ம் ஆண்டு காரைக்கால் பகுதியில் சுதந்திர வேட்பாளராக போட்டியிட்டார். 1992ம் ஆண்டு ராமசுவாமி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

முதலமைச்சர் எஸ்.ராமசுவாமி மறைவிற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். புதுச்சேரியின் தற்போது முதலமைச்சர் வி. நாராயணசுவாமி நேரில் சென்று இறந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினார்.மறைந்த எஸ்.ராமசாமிக்கு மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர்.

மேலும் படிக்க