• Download mobile app
16 Jan 2026, FridayEdition - 3628
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருமணக் கொண்டாட்டத்தில் உயிரிழந்த மணமகன்

May 13, 2017 தண்டோரா குழு

குஜராத் மாநிலத்தில் திருமண கொண்டாட்டத்தின் போது, திடீரென மணமகன் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள ரனோலி கிராமத்தை சேர்ந்தவர் சாகர் சோலங்கி. இவருக்கு வெள்ளியன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கான அனைத்து முன் ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது. இதற்கிடையில், வியாழன்று திருமண கொண்டாட்ட நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோலங்கி, ஒருவரின் தோளில் அமர்ந்து கொண்டு மகிழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென சோலங்கி மயங்கி விழுந்துள்ளார். இதையெடுத்து, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சோலங்கி மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் திடீரென உயிரிழந்த சம்பவம் இரு வீட்டாரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த காட்சி முழுவதும் வீடியோவாக படமெடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க