தமிழகத்தில் நாளை தொடங்கவுள்ள முதல் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் சேவையில் செல்போன் சிக்னல் கிடைக்காது என்று கூறப்படுகிறது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து பரங்கிமலை வரையும், சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான சுரங்கவழி மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் தொடங்குகிறது. எட்டு கி.மீட்டர் தொலைவுக்கு இந்த சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மெட்ரோ ரயில், சுரங்க வழி பாதையில் செல்வதால், ரயில் பயணத்தின்போது செல்போன் சிக்னல் கிடைக்க வாய்ப்புகள் இல்லை எனவும், விரைவில் சுரங்கபாதை ரயில் நிலையங்களில் செல்போன் சிக்னல் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் எனவும், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்