• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமைச்சர் சரோஜா தன்னை மிரட்டுவதாக அதிகாரி மீனாட்சி புகார் !

May 11, 2017 தண்டோரா குழு

தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தன்னை மிரட்டுவதாகவும், தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி மீனாட்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

“மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நான் தருமபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். என் பணியை சரியாக செய்து வருகிறேன். சில நாட்களாக மறைமுகமாக பணியைவிட்டு செல்ல எனக்கு நெருக்கடிவந்தது.

குழந்தைகள் நல பாதுகாப்பு தொடர்பான புத்தகம் வெளியீடு தொடர்பாக சந்திக்க கடந்த ஞாயிறன்று அமைச்சர் சரோஜா வீட்டுக்கு சென்றேன். அங்கு அமைச்சர், அவரது கணவர் உட்பட மூன்று பேர் இருந்தனர். அவர்கள் என்னிடம் பணிக்காக லஞ்சம் எதிர்பார்த்தனர். குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி பதவி ரூ.10 லட்சம் போகும் என்றனர்.

நான் எனது குழந்தையுடன் தனியாக வசிப்பதால், சென்னைக்கு பணியிட மாற்றம் கேட்டிருந்தேன். இதற்கு ரூ.30 லட்சம் தர வேண்டும் என்றனர். பணம் தர வேண்டும். அல்லது நானாக ராஜினாமா செய்ய வேண்டும் என மிரட்டினர். ராஜினாமா செய்யாவிட்டால் பணிநீக்கம் செய்வோம், தேவையில்லாமல் புகார் செய்வோம் என மிரட்டல் விடுத்தனர்.

என்னுடைய பணி ஒப்பந்த பணி தான். நிரந்தர பணி கிடையாது. முதல்வரிடம் மனு கொடுக்க முயற்சி செய்தேன். அதன் பின் அமைச்சர் தங்கமணியிடம் புகார் மனு அளித்துள்ளேன்.

இந்த மிரட்டல் தொடர்பாக ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரம் உள்ளது. மிரட்டலுக்கான ஆதாரத்தை தமிழக ஆளுனருக்கு அனுப்பியுள்ளேன். பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் ஆளை வைத்து காலி செய்துவிடுவேன் என அமைச்சரின் கணவரும், அமைச்சரும் கூறினர்.

எனது வாழ்க்கைக்கும் பணிக்கும் பாதுகாப்பு வேண்டும். சமூக நலத்துறையில் லஞ்சம் தலைவிரித்தாடினால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க