• Download mobile app
01 Dec 2025, MondayEdition - 3582
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெ., உயில் என்னிடம் தான் உள்ளது தீபக்

May 9, 2017 தண்டோரா குழு

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ஜெயலலிதாவின் உயில் தன்னிடம் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது. எனினும், அவரது பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் யாருக்கு சேரும் என்று குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், ஒரு தனியார் ஆங்கில ‘டிவி’ சேனலுக்கு ஜெ. அண்ணன் மகன் பேட்டியளித்தார். அப்போது, என் அத்தை ஜெயலலிதா எழுதிய உயில் என் வசம் தான் உள்ளது. அந்த உயிலில், அனைத்து சொத்துக்களும் என் பெயரிலும், என் சகோதரி தீபா பெயரிலும் எழுதப்பட்டுள்ளன.

அதன்படி,சென்னை போயஸ் கார்டன் பங்களா, சென்னை பார்சன் காம்ப்ளக்சில் உள்ள இரண்டு கட்டடங்கள், சென்னை, செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள ஜெயலலிதா வீடு, கோடநாடு எஸ்டேட், ஐ தராபாத்தில் உள்ள திராட்சை தோட்டம் உள்ளிட்ட எட்டு சொத்துக்கள் எனக்கு சொந்தம்இவ்வாறு தீபக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க