• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உத்தரபிரதேஷத்தில் அசைவ உணவு இடம்பெறாததால் நின்று போன திருமணம்

April 28, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேஷத்தில் அசைவ உணவு இடம்பெறாததால் திருமணம் நின்று போன,சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேஷ மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி ஏற்ற பிறகு, சட்ட விரோதமாக நடத்தப்படும் அனைத்து இறைச்சி கூடங்களையும் மூட உத்தரவிட்டார். இதனால், மாநிலம் முழுவதிலும் இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. சில பகுதியில் அரசிடமிருந்து உரிய அனுமதியுடன் இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. ஆனால், அந்த கடைகளில் இறைச்சியின் விலைகள் மிக அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில், முசாபர் மாவட்டத்தில் வியாழக்கிழமை திருமண நிகழ்ச்சியில், விருந்து ஏற்பாடு செய்யப்படிருந்தது. பொதுவாக அந்த பகுதியில் திருமணம் உள்ளிட்ட அனைத்து விஷேசங்களுக்கும் எருமை மாட்டுக்கறி பரிமாறப்படுவது வழக்கம். ஆனால், இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், அந்த திருமணத்தில் சைவ உணவு பரிமாறப்பட்டது.

இதை கண்ட மணமகன் வீட்டார் கடும் கோபம் அடைந்துள்ளனர். இறைச்சி கிடைக்காத சூழ்நிலையை பெண்ணின் வீட்டார் எடுத்துக்கூறியும் அதை ஏற்க மறுத்துவிட்டனர். இதையடுத்து, பஞ்சாயத்தை கூட்டி இந்த பிரச்சனைக்கு முடிவு காண முயன்றனர். இருப்பினும், மாப்பிளை வீட்டார் சமாதானம் ஆகாததை கண்ட மணப்பெண் கோபம் கொண்டு, திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

திருமணதிற்கு வந்திருந்த இளைஞர் ஒருவர், நடந்த அனைத்தையும் கண்டு, அந்த பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தார். அவருடைய விருப்பத்தை மணப்பெண்ணும் முழுமனதோடு ஏற்றுக்கொண்டார். அவர்களுடைய திருமணதிற்கு பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். சைவ விருந்துடன் இனிதே திருமணம் நடைபெற்றது.

மேலும் படிக்க