• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மக்களுக்கு தமிழக முதல்வர் துரோகம் செய்துவிட்டார் – மு.க. ஸ்டாலின்

April 24, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் நிலவி வரும் கடும் வறட்சி, குடிநீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலை, உள்ளிட்ட பிரச்சனைகள் பற்றி நிதி அயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசமால் வந்திருப்பது மக்களுக்கு அவர் செய்த துரோகமாகும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“ தில்லியில் நடைபெற்ற நிதி அயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும், சொல்லவும் தவறி விட்டார்.

தில்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான விவசாயக் கடன்களை தள்ளுபடி குறித்து கூட்டத்தில் தமிழக முதல்வர் பேசவில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடி வருகிறார்கள். அந்த திட்டத்தை ரத்து செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கவில்லை. அதே போல் தடுப்பணை, அத்திக்கடவு அவினாசி திட்டம் பற்றியும் முதல்வர் பேசவில்லை.

மாநில உரிமைகள் பற்றி பேசினால் தன் பதவிக்கு ஆபத்து வந்து விடப்போகிறது என்ற அச்சத்தில் ஏற்கனவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மத்திய அரசிடம் எடுத்து வைத்த கோரிக்கைகளில் சிலவற்றை மட்டும் வலியுறுத்திப் பேசிவிட்டு, தமிழகம் இன்றைக்கு சந்தித்துக் கொண்டிருக்கும் கடும் வறட்சி, குடிநீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலை, அண்டை மாநிலங்கள் தமிழகத்தின் தண்ணீர் உரிமைகளைப் பறிப்பது உள்ளிட்ட மிக முக்கியமான வாழ்வாதாரப் பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் வந்திருப்பது வாக்களித்த மக்களுக்கு முதல்வர் செய்துவிட்ட துரோகமாகும்,”

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் படிக்க