• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாணவ, மாணவிகள் கின்னஸ் சாதனை முயற்சி

April 20, 2017 தண்டோரா குழு

கோவை, கேம்போர்டு பள்ளி மாணவ, மாணவிகள் 2 லட்சத்து 35 ஆயிரம் காகித கோப்பைகளில் மறைந்த அப்துல்கலாம் உருவப்படத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை முயற்சி புரிந்துள்ளனர்.

கோவை மணியகாரன்பாளையத்தில் உள்ளது, கேம்போர்டு இன்டர்நெஷனல் பள்ளி. இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக 2,35,000 காகித கோப்பைகளை வைத்து 10,560 சதுர அடியில் 3 மணி நேரத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உருவப்படத்தை வரைந்து சாதனை புரிந்துள்ளனர். இதற்கு முந்தைய சாதனையாக லக்னோவில் 2016ம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய டிஸ்போசபிள் கப்மொசைக்காக வோடோபோன் லோகோ ஏற்படுத்தப்பட்டது.

அச்சாதனையில் 1,40,000 கப்புகளை 627 சதுரடியில் 4.15 மணி நேரம் செலவிட்டு
உருவாக்கப்பட்டது.தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. கேம்போர்டு பள்ளி மாணவர்கள் 2 லட்சத்து 35,000 கப்புகளை பயன்படுத்தி 10,560 சதுர மீட்டரில் 3 மணி நேரத்தில் செய்து முடித்துள்ளனர். காலை 6.30 மணிக்கு துவங்கிய இந்த சாதனை துவக்கம் காலை 9.00 மணிக்கு நிறைவுபெற்றது. இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி ஒரு சர்வேயர், 2 சாட்சிகள், 4 பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்தது. இதன் வீடியோ நிகழ்வும் கின்னஸ் புக்கில் இடம் பெற ஆதாரமாகவும் அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து, பள்ளியின் தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் கூறும்போது,

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவரும், மாணவியரும் தங்களது பங்கு என்ன, என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தனர். நிகழ்வுக்கு முன்பாக மாணவர்கள் போதுமான பயிற்சி பெற்றிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் இதுபோன்று மாணவர்களை ஒருங்கிணைந்து குழுவாக செயல்படும் நிகழ்வை நடத்தி வருகிறோம்.

இது எங்களது இரண்டாவது கின்னஸ் சாதனைக்கான முயற்சி, கடந்த 2013ம் ஆண்டில் புலிகளை காக்கும் விழிப்புணர்வுக்காக 35,000 தபால் அட்டைகளைக் கொண்டு செய்திருந்தோம். இந்த ஆண்டு அனைவரும் நேசிக்கும் நமது முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இதனை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர் என கூறினார்.

பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ் பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் இந்த நிகழ்வை பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினர்.

மேலும் படிக்க