• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக ஆளுநரை தம்பிதுரை, ஜெயக்குமார் சந்தித்தனர்

April 20, 2017 தண்டோரா குழு

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் இன்று சந்தித்தனர்.

தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து, தம்பிதுரை மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் ஆளுநரிடம் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக.,வின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வரும் இந்த சூழலில் ஆளுநர் உடனான இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில்,

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை குறித்தும் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஓ.பி.எஸ் அணிக்கு அந்த அமைச்சர் பதவி வழக்கப்படுவது குறித்தும் ஆளுநரிடம் பேசியிருக்கலாம்,” என கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மீன்வளப் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் அவரை சந்தித்திருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க