• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

படை வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்குவதாக புகார் அளித்த பிஎஸ்எஃப் வீரர் பணிநீக்கம்

April 19, 2017 தண்டோரா குழு

பாதுகாப்புபடை வீரர்களுக்கு தரமற்ற உணவு விநியோகிக்கப்படுவதாகப் சமூக ஊடகங்களில், புகார் அளித்த பிஎஸ்எஃப் வீரர் தேஜ் பகதூர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதம் முன்பு பிஎஸ்எஃப்., எனப்படும் எல்லை பாதுகாப்புப் படையில் பணிபுரியும் தேஜ்பகதூர் யாதவ் என்பவர், தன்னைப் போன்ற தேசத்தை பாதுகாக்கும் வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக, வீடியோ பதிவு ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். இது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல தரப்பினரும் அதிர்ச்சி தெரிவித்ததை தொடர்ந்து, இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதுமட்டுமின்றி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது.

இந்நிலையில், தேஜ்பகதூர் யாதவ், ஒழுங்கீன குற்றச்சாட்டுகளுக்காக பணி இருந்து நீக்கம் செய்யப்படுவதாக, பிஎஸ்எஃப் அறிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க