• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குனர் மணிரத்னம் வீட்டு முன்பு தீக்குளிப்பேன் – லைட் மேன் மிரட்டல்

April 17, 2017 தண்டோரா குழு

தனக்கு இழப்பீடு வழங்காவிட்டால், இயக்குநர் மணிரத்னம் வீட்டுக்கு முன்பு தற்கொலை செய்து கொள்வேன் என லைட்மேன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இயக்குநனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிப்பில் வெளியாகிய படம் குரு. இந்த படத்தில் லைட்மேனாக மணிமாறன் என்பவர் பணியாற்றியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, மணிமாறனுக்கு ரத்தம் தொடர்பான தொற்று நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, அவர் தனக்கு நிதியுதவி அளிக்குமாறு இயக்குநர் மணிரத்னம் மற்றும் லைட்மேன் சங்கம் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் இருதரப்பினரும் மணிமாறனை கண்டுகொள்வதாக இல்லை. இதனைத் தொடர்ந்து கடந்த 2007-ஆம் ஆண்டு லைட்மேன் சங்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் மணிமாறன் வழக்கு தொடுத்தார். அதில் மணிமாறனுக்கு சாதகமான தீர்ப்பு
வந்தது. ஆனாலும் லைட் மேன் சங்கம், அவருக்கான நிவாரண உதவியை தற்போது வரை செய்யவில்லை.

இதனால் கடும் வேதனைக்குள்ளாகியுள்ள மணிமாறன் தனக்கு வரவேண்டிய பணம் வரவில்லை என்றால் நான் மணிரத்னம் வீட்டு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வேன் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க