• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

படபிடிப்பில் காட்டுயானை பீதியடைந்த ‘டிக் டிக் டிக்’ குழு

April 17, 2017 தண்டோரா குழு

“மிருதன்” படத்தை எடுத்த சக்தி செளந்தர்ராஜன், அடுத்ததாக இயக்கிவரும் படம் ‘டிக் டிக் டிக்’. இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். இந்தியாவின் முதல் விண்வெளி சார்ந்த படமாகும்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில், கேரளாவின் மூணார் பகுதியில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. அப்போது அழையா விருந்தாளியாக வந்த காட்டு யானையை பார்த்து படக்குழுவினர் பீதியடைந்துள்ளனர். காரணம், ஆணையிறங்கல் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் அறிந்து தாங்கள் அஞ்சியதாக இயக்குனர் சக்தி கூறினார்.

ஆனால், அந்த யானைகளோ அருகில் இருந்த ஏரியில் தண்ணீர் குடித்துவிட்டு திரும்பிவிட்டதாம். அதன்பின்னரே அனைவருக்கும் நிம்மதிப் பெருமூச்சு வந்திருக்கிறது. என்ன… நிவேதா பெத்துராஜ் தான் கொஞ்சம் அதிகமாக பயந்துவிட்டாராம்.

ஜெயம் ரவி, நிவேதா கலந்துக் கொண்ட அந்த படப்பிடிப்பு கடந்த வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க