• Download mobile app
01 Dec 2025, MondayEdition - 3582
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான் யாருக்கும் நோட்டீஸ் அனுப்பவில்லை–கே.ஜே.யேசுதாஸ்

April 17, 2017 தண்டோரா குழு

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் சார்பில் நடந்த அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக பிரபல பின்னணி பாடகர் கே.ஜே யேசுதாஸ் கோவைக்கு வந்தார்.

பின்னர் செய்தியாளர்ககளை சந்தித்து பேசினார். அப்போது, தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மற்ற விருதுகளை பெற்றால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவேனோ அதைப்போலவே இந்த விருதை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடவுள் அருளால் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும் என்றார்.

அப்போது, இளையராஜா தனது பாடல்களை மேடைகளில் பாடக்கூடாது என எஸ்.பி.பாலசுப்ரமணியதுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு, நான் யாருக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை நோட்டீஸ் அனுப்பியவரை போல் கேளுங்கள் என்று வேகமாக எழுந்து சென்றார்.

மேலும் படிக்க