April 17, 2017
தண்டோரா குழு
அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான Advantage Strategic Consulting என்ற நிறுவனம் ரூ.45 கோடி மோசடி செய்ததாகவும் இவருடைய கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படும் வாசன் ஹெல்த் கேர் நிர்வாகம் ரூ.2262 கோடி மோசடி செய்ததாகவும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இரு தனித்தனி நோட்டீஸ்களாக அனுப்பபட்டாலும் இரண்டு வழக்குகளும் தொடர்புடையவை என்றும் இரு பிரிவுகளாக விசாரிக்கப்பட இருப்பதால் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.