April 17, 2017 தண்டோரா குழு
பேஸ்புக் வலைதளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஏப்ரல் 16) கொலையை நேரடியாக ஒளிப்பரப்பியவரை கிளீவ்லேண்ட் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில்,
“பேஸ்புக் வலைதளத்தில் கொலையை நேரடியாக ஒளிப்பரப்பிய ஸ்டீவ் ஸ்டீபன்ஸ் என்பவரை தேடி வருகிறோம். அவர் பல கொலைகளை செய்துள்ளதாக அந்த காணொளியில் கூறியுள்ளார். ஆனால் அவர் கூறியதற்கு எந்த சாட்சியும் இல்லை” என்றார்.
கிளீவ்லேண்ட் காவல்துறை அதிகாரி கால்வின் வில்லியம்ஸ் மற்றும் மாநகராட்சி மன்றத் தலைவர், ப்ரான்க் ஜாக்சன் செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்ததாவது:
“காவல்துறையினர் ஸ்டீபனை மும்முரமாக தேடி வருகின்றனர். அவன் வெள்ளை அல்லது க்ரீம் வண்ண வாகனத்தை ஓட்டுகிறான் என்றும் அவனிடம் ஆயுதங்களும் உண்டு என்றும் அவன் மிகவும் ஆபத்தானவனும் கூட என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.
மேலும், பேஸ்புக் லைவ் ஸ்ட்ரீமிங் வீடியோ சர்விஸ் என்று அழைக்கப்படும் பேஸ்புக் லைவ்வை பயன்படுத்தி கொலை செய்த சம்பவத்தை வெளியிட்டுள்ளான்” என்று தெரிவித்தனர்.
பேஸ்புக் நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில்,
“இது போன்ற கொடுமையான குற்றத்தை பேஸ்புக்கில் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்” பேஸ்புக்கில் பாதுகாப்பான சூழ்நிலையை வைத்திருக்க மிகவும் பாடுபட்டு வருகிறோம்” என்று தெரிவித்தார்.