• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தில்லி மெட்ரோ ரயில் நிலைய தொலைக்காட்சியில் ஓடிய ஆபாச காட்சி !

April 15, 2017 தண்டோரா குழு

தில்லி ராஜீவ் சொவ்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒன்பதாவது பிளாட்பாரத்தில் உள்ள விளம்பர தொலைக்காட்சி பெட்டியில் விளம்பரங்களுக்கு இடையே திடிரென ஒரு நிமிடம் வரை ஆபாச காட்சி வெளியானது. இச்சம்பவத்தால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் ஏப்ரல் 9-ம் தேதி நடந்துள்ளது. ஆபாச காட்சி வெளியான சம்பவத்தை சிலர் தங்களது செல்போனில் படம் படித்து அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றுள்ளனர். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.தில்லி மெட்ரோ ரயில் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்,

“விளம்பரங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் சேவையை தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் பெற்றுள்ளன. இந்த காட்சி வெளியான சம்பவத்திற்கும் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனினும் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

தில்லி காவல்துறையினர் இது பற்றி கூறுகையில்,

இதுவரை தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்திடமிருந்து எந்த ஒரு புகாரும் வரவில்லை. அவர்கள் புகார் அளித்தால் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மேலும் படிக்க