“Once in a blue moon while” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. மிக அரிதாக நடக்கும் ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட, இவ்வாறு சொல்வதுண்டு.
இந்தப் பழமொழிக்கு பின்னல் ஒரு அறிவியல் சங்கதி உண்டு. மாதம் தோறும், பௌர்ணமி நிலவு தோன்றினாலும், நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு குறிப்பிட்ட பௌர்ணமி நிலவு நீல நிறத்தில் தோன்றும். அது போல என்றாவது ஒரு நாள் நடைபெறும் நிகழ்வை அவ்வாறு கூறுவது வழக்கம்.
அதற்கு இப்போது என்ன என்று கேட்கிறீர்களா? நீல நிற நிலவு அரிதென்றால் நேற்று இரவு நிலவு பச்சை நிறத்தில் தோன்றியது அரிதிலும் அரிதான நிகழ்வு. உண்மை தான். பச்சை நிலவும் சாத்தியமே. இதனைக் கூறுவது அறிவியலாளர்கள். நேற்று பௌர்ணமி என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. நாம் வாழும் அண்டத்தில், எண்ணிலடங்கா கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள், ஒரு சீரிய நீள்வட்ட வடிவில் ஒன்றை ஒன்று மோதாமல் சுற்றி வருவது தெரிந்ததே.
நம் சூரிய குடும்பத்தில் உள்ள 9 கிரகங்களில் சில எப்போதாவது அருகருகே வரும். அப்படியான ஒரு அப்பூர்வ நிகழ்வு, நேற்று காணப்பட்டது, அவ்வாறு வரும்போது வளிமண்டலத்தில் அதிகப்படியான தூசிகள் இருக்கும். அவை சூரிய ஒளியை பரதிபலிக்கும்.
நிலவும் எப்போதும் போல் தன் மீது விழும் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும். அப்போது ஒரு நிறக்கலவை உருவாகும். பூமிக்கு அருகே உள்ள நிலவு மீது இந்த நிறக்கலவை தனது தாகத்தை ஏற்படுத்தும். அப்போது நிலவு பச்சை நிறமாகத் தோன்றும்.
அறிவியல் கோட்பாடுகள் இது சாத்தியம் என்று கூறும் அதே வேளையில், சில குறிப்பிட்ட சமுதாயத்தினர் இது உலக முடிவிற்கு அறிகுறி என்றும் செய்தி பரப்பி வருகின்றனர். மேலும் பலபல சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் வெவ்வேறு அறிவியலாளர்கள் பச்சை நிலவு பற்றி எதிரெதிர் கோட்பாடுகள் தெரிவித்து வருகின்றனர்.
எது எப்பிடியோ, இந்த இரண்டு விஷயங்களையும் மனதில் கொண்டு நம் தண்டோரா குழு, நேற்று சித்ரா பௌர்ணமி நிலவை நோட்டமிட்டது…. இதோ உங்கள் பார்வைக்கு அந்தப் பதிவு.
(WNCT) சார்பாக “பாம்புகளை அறிவோம் பாம்பு கடி மரணமில்லாத கோவையை உருவாக்குவோம் கல்வி புத்தகம் வெளியீடு
ஈஷாவில் சத்குரு வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ தியான நிகழ்ச்சி -தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை
கோவையில் சி.ஐ.ஐ மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு-தாய்வான் தொழில்நுட்ப ஆடைகள் கூட்டு மாநாடு 2025 துவக்கம்
கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்ற பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம்
கோவை வாசவி திருக்கோயிலில் மண்டல பூஜை ஒட்டி நடைபெற்ற மகிழ்வித்து மகிழ் நிகழ்ச்சி
பசுமை தொண்டாமுத்தூர் சார்பில் 2025-இல் 2 லட்சம் மரங்கள் நடத்திட்டம்