• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுப்பிரமணியன் சாமி உள்ளிட்ட 6 பேர் ராஜ்ய சபாவிற்கு பரிந்துரை.

April 22, 2016 தண்டோரா குழு

ராஜ்யசபாவில் மொத்தம் 12 நியமன எம்பிக்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 5 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள் ஓய்வுபெற்றும், விலகியும் சென்றனர்.

இதையடுத்து மொத்தம் காலியாக உள்ள 7 இடங்களுக்குப் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, மலையாள நடிகர் சுரேஷ் கோபி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, குத்துச்சண்டை வீரர் மேரி கொம், பத்திரிக்கையாளர் ஸ்வபன் தாஸ் குப்தா, பொருளாதார நிபுணர் நரேந்திர ஜாதவ் ஆகிய 6 பேர் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் உள்ள ஒரு இடத்திற்கு ஹிந்தி நடிகர் அனுபம்கேரை நியமிப்பதா அல்லது பத்திரிக்கையாளர் ரஜத் சர்மாவைப் பரிந்துரைப்பதா என்ற குழப்பத்தில் இன்னும் பரிந்துரைக்காமல் உள்ளனர்.

இதில் சித்துவை திடீரென சேர்த்தது, அவரை ஆம் ஆத்மி பார்ட்டியினர் தங்கள் பக்கம் இழுத்து பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக அறிவித்து விடுவார்களோ என்ற பயத்தில் தான் எனக் கருத்துகள் வெளிவந்துள்ளன.

மேலும் படிக்க