April 5, 2017 
tamilsamayam.com
                                மதுரை ரசிகர்கள் மீது தனி மரியாதை வைத்துள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் வெளியாகவுள்ள ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தை பிரபலப்படுத்த தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காற்று வெளியிடை பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி,
“ நான் மதுரைக்கு பல முறை வந்திருந்தாலும், அமெரிக்கன் கல்லூரிக்கு இப்போதுதான் முதல்முறையாக வருகிறேன். மதுரை ரசிகர்கள் மீது எனக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. 
இந்தப் படத்தில் ஒரு ராணுவ வீரராக நடித்துள்ளேன். தமிழ் மொழிக்கும் இந்த படத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த படம் வெற்றியடையும் என நம்புகிறேன். ” என பேசினார்.
கார்த்தி அறிமுகமான ‘பருத்தி வீரன்’ திரைப்படம் மதுரை சுற்றுப்புற கிராமங்களை கதைக்களமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த படத்தில் மதுரை வட்டார மொழியில் கார்த்தி பேசியிருந்தது பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.