• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

25 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி – குஷ்பு கூட்டணி

March 20, 2017 தண்டோரா குழு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கபாலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் மீண்டும் ரஜினியை வைத்து அடுத்த படம் இயக்கவுள்ளார்.

இப்படம் கபாலி படத்தின் இரண்டாம் பாகமாக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு குஷ்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதனை ஒரு டுவீட் மூலம் அவரே உறுதிபடுத்தியுள்ளார்.

இதற்கு முன் தர்மத்தின் தலைவன், அண்ணாமலை, மன்னன் மற்றும் பாண்டியன் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி – பா.ரஞ்சித் இணையும் இப்படத்தைதனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. ஷங்கரின் 2.0 படத்தின் டப்பிங் பணிகள் முடிந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க