• Download mobile app
30 May 2026, SaturdayEdition - 3762
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் மோடிக்கு 11 வயது பாகிஸ்தான் சிறுமி கடிதம்

March 15, 2017 தண்டோரா குழு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பா,ஜ.க. வெற்றியடைந்ததற்கு 11 வயது பாகிஸ்தான் சிறுமி வாழ்த்து தெரிவித்திருக்கிறாள்.

அண்மையில் நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றியடைந்தது. இந்த வெற்றியைப் பாராட்டி, பிரதமர் மோடிக்கு 11 வயது அகீதாத் நவீத் என்னும் பாகிஸ்தான் சிறுமி வாழ்த்து கடிதம் எழுதியுள்ளாள்.

“இதயங்களை வெற்றி கொள்வது ஒரு அருமையான வேலை என்று என் தந்தை ஒரு முறை கூறினார். இந்திய மக்களில் இதயங்களை நீங்கள் வென்றதால்தான், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றீர்கள்.

பல இந்திய மக்களின் இதயத்தையும் பாகிஸ்தான் மக்களின் இதயங்களையும் வெல்லவேண்டுமானால், நீங்கள் இருநாடுகளுக்கிடையே நட்பையும் சமாதானத்தையும் மேற்கொள்ள வழிமுறைகளை வகுக்கவேண்டும். இரண்டு நாடுகளுக்கும் இடையே நல்ல உறவு தேவை. இந்திய, பாகிஸ்தானுக்கிடையே அமைதியின் பாலத்தை உருவாக்குவோம். தோட்டாக்களை வாங்காமல் புத்தகங்களை வாங்குவோம் என்று முடிவெடுப்போம். துப்பாக்கிகளை வாங்காமல் ஏழை மக்களுக்கு மருந்துகளை வாங்கி கொடுப்போம்” என்று இரண்டு பக்கங்களில் அகீதாத் கடிதம் எழுதியிருந்தாள்.

இரண்டு நாடுகளுக்கு இடையே சமாதானத்தைக் கொண்டு வர ஒரு பாலமாக அமைந்து, இந்திய மக்களில் இதயங்களையும் பாகிஸ்தான் மக்களில் இதயங்களையும் வெற்றிக்கொள்ள கவனம் செலுத்தவேண்டும்” என்று அவளுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாள்.

மேலும் படிக்க