• Download mobile app
26 Dec 2025, FridayEdition - 3607
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கமல்ஹாசன் மீது மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

February 20, 2017 tamilsamayam.com

நடிகர் கமல்ஹாசன் மீது இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் தமிழக அரசியல் குழப்பங்களை உன்னிப்பாக கவனித்து அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் உலகநாயகன் கமல்ஹாசன் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஊர் திரும்பும் எம்.எல்.ஏ-க்களுக்கு அவர்களுக்கு உரிய மரியாதையுடன் தமிழக மக்கள் வரவேற்பளிக்க வேண்டும் என உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்க்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்த கருத்தை எதிர்த்து, நடிகர் கமல்ஹாசன் மீது இந்திய தேசிய லீக் கட்சியின் வட சென்னை மாவட்டம் சார்பில் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், கமல்ஹாசனின் இந்த கருத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக மக்களை வன்முறைக்கு தூண்டும் விதமாக உள்ளது. தமிழகத்தின் பெரிய நடிகர் என்பதால், இவரது கருத்து தவறான முறையில் விளங்கி வன்முறைக்கு அழைத்துச் செல்லும். எனவே, வன்முறையை தூண்டும் விதத்தில் சமூக வலைதளத்தில் கருத்தினை பதிவிட்ட கமல்ஹாசன் மீது சென்னை மாநகரக் காவல்துறை நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க