• Download mobile app
20 Sep 2026, SundayEdition - 3875
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு

February 15, 2017 தண்டோரா குழு

தான் கடத்தப்பட்டதாக மதுரை தெற்கு எம்.எல்.ஏ. கொடுத்த புகாரின் பேரில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன், கூவத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் சசிகலாவும், எடப்பாடி பழனிச்சாமியும் அடைத்து வைத்திருந்தனர் என்றும் அங்கிருந்து மாறுவேடத்தில் தான் தப்பி வந்ததாகவும் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.அதன் அடிப்படையில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள கூவத்தூர் சொகுசு விடுதியில் காஞ்சீபுரம் எஸ்.பி முத்தரசி மற்றும் வடக்கு மண்டல இன்ஸ்பெக்டர் ஜெனரல் செந்தாமரைக் கண்ணன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா மற்றும் மீது, ஐ.பி.சி., 342, 343, 365, 353, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க