ஓ. பன்னீர் செல்வத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், திடீரென்று போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
தன்னை வற்புறுத்தி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கியதாகவும், தனி ஆளாகப் போராடி கட்சியைக் காப்பாற்றத் தயாராக இருப்பதாகவும் பன்னீர்செல்வம் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து சசிகலா அணி, பன்னீர் செல்வம் அணி என இரண்டு அணிகள் அதிமுகவில் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பன்னீர்செல்வம் சென்னை கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைப் புதன்கிழமை சந்தித்தார். அப்போது, ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ. தீபாவுடன் இணைந்து பணியாற்றவும் தயார் என்றார். அத்துடன் தீபாவுக்கு அழைப்பு விடுக்க இருப்பதாகவும் கூறினார்.
அதைத் தொடர்ந்து, தி. நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெ. தீபா, “தற்போதைய சூழலில் நான் ஏதும் கூற முடியாது. எனது நிலையை விரைவில் அறிவிப்பேன்.
முதல்வரைச் சந்திப்பது குறித்து இனிதான் முடிவு செய்ய வேண்டும். பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து விரைவில் தெரிவிப்பேன். என்னைப் பற்றிய யூகங்களை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறினார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்