November 27, 2026
தண்டோரா குழு
இந்தியாவின் அதிவேகமாக வளர்ந்து வரும் வர்த்தக மற்றும் முதலீட்டுத் தளங்களில் ஒன்றான தன் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ரெய்ஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ்,இந்திய வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட,செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய சார்ட்டிங் தளமான ‘ டிரேடிங் சார்ட்ஸ் ‘-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
டிரேடிங் சார்ட்ஸ் முழுமையாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் இது தன் நிறுவனத்தின் பிரத்யேக வர்த்தக இயந்திரமான டெக்ஸ்ட் மற்றும் ரெய்ஸ் நிறுவனத்தின் சொந்த செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பு ஆகியவற்றுடன் ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. டிரேடிங்சார்ட்ஸ்.கோ என்ற இணையதளத்தில் ஒரு தனித்துவமான சார்ட்டிங் தளமாக, அதிநவீன சார்ட்டிங் வசதிகளை முற்றிலும் இலவசமாக வழங்குவதன் மூலம், கோடிக்கணக்கான இந்திய வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு மேம்பட்ட சந்தைப் பகுப்பாய்வு மற்றும் வர்த்தகக் கருவிகளைக் கொண்டு சேர்ப்பதை டிரேடிங்சார்ட்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளம் 20-க்கும் மேற்பட்ட சார்ட் வகைகள், 200-க்கும் மேற்பட்ட இலவச இண்டிகேட்டர்கள், 8-க்கும் மேற்பட்ட சார்ட் லேஅவுட்கள், வினாடிகள் முதல் நாட்கள் வரையிலான பல கால அளவுகள் மற்றும் ஆர்டர் ஃப்ளோ , வால்யூம் கேண்டில்ஸ், வால்யூம் புரொஃபைல் , டெப்த் ஆஃப் மார்க்கெட் மற்றும் பார் ரீப்ளே போன்ற மேம்பட்ட சந்தைப் பகுப்பாய்வுக் கருவிகளை வழங்குகிறது. டிரேடிங்சார்ட்ஸ் -ஐ ஒருங்கிணைத்த முதல் புரோக்கிங் தளம் தன் ஆகும்; காலப்போக்கில் இத்தளத்தை மற்ற புரோக்கரேஜ் நிறுவனங்கள் மற்றும் சந்தை பங்கேற்பாளர்களுக்கும் விரிவுபடுத்த ரெய்ஸ் திட்டமிட்டுள்ளது.
“ஒரு வர்த்தகரைப் பொறுத்தவரை, அனைத்தும் சார்ட்டுகளில் இருந்தே தொடங்குகின்றன – வர்த்தக யோசனை, நுழைவு பொசிஷன், வெளியேறுதல் என ஒட்டுமொத்த வர்த்தகப் பயணமும் சார்ட் திரையிலேயே அரங்கேறுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், சார்ட்டுகளிலேயே நேரடியாக வர்த்தகம் செய்வது, டிராக் & டிராப், ஸ்கால்பர்கள் , இந்தியச் சந்தைக்கே உரிய பிரத்யேக கால அளவுகள் , பார் ரீப்ளே மற்றும் இன்று இத்துறையின் தரநிலைகளாக மாறியுள்ள இன்னும் பல முன்னோடி அம்சங்களை தன் அறிமுகப்படுத்தியுள்ளது.
இருப்பினும், இத்தகைய தீர்வுகள் மூன்றாம் தரப்பு மென்பொருள் கட்டமைப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்ததாலும், அவற்றில் எங்களுக்கு வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடே இருந்ததாலும், வர்த்தகர்களின் கருத்துக்களை எங்களால் செயல்படுத்த முடியாத சூழல்களும் இருந்தன,” என்று ரெய்ஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பிரவீன் ஜாதவ் தெரிவித்தார்.