• Download mobile app
27 Nov 2026, FridayEdition - 3943
FLASH NEWS
  • மாற்றம் மாற்றம் என்ற முதலமைச்சர் என்ன வெங்காயம் மாற்றம் செய்தார்..? – வி த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை கேள்வி
  • திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது – சௌமியா அன்புமணி வரவேற்பு
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோயம்புத்தூரில் இன்று முதல் 3 நாட்கள் பிளாஸ்டெக் எக்ஸ்போ மற்றும் வேஸ்டெக் எக்ஸ்போ துவங்கியது

November 27, 2026 தண்டோரா குழு

வேஸ்டெக் இந்தியா எக்ஸ்போவுடன் இணைந்து நடைபெறும் பிளாஸ்டெக் இந்தியா எக்ஸ்போவின் 2வது பதிப்பு, கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் இன்று முதல் துவங்கியது. வரும் 29-ம் தேதி வரை 3 நாட்கள் இக்கண்காட்சி நடைபெறும்.

இக்கண்காட்சியை கோயம்புத்தூர் சின்னவேடம்பட்டி தொழிற்துறை சங்கத்தின் தலைவர் திரு என். தேவகுமார், கோயம்புத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர் நலச் சங்கத்தின் தலைவர் திரு என். மதிவண்ணன், மற்றும் ஊடகத்துறை சார்பில் அதன் இயக்குநர் திரு ராம் சௌந்தல்கர், சந்தைப்படுத்தல் தலைவர் திரு முகமது முதாசிர் ஆகியோர், தொழில்துறை பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது.

அகில இந்திய பிளாஸ்டிக் தொழில்கள் சங்கம், அகில இந்திய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், கர்நாடக மாநில பாலிமர்கள் சங்கம் மற்றும் கோயம்புத்தூரின் சின்னவேடம்பட்டி தொழிற்துறை சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெறும் இந்த முதன்மை நிகழ்வுகளில், சுமார் 100-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர். பிளாஸ்டிக், பாலிமர்கள், பேக்கேஜிங், இயந்திரங்கள், மறுசுழற்சி தொழில்நுட்பங்கள், கழிவு மேலாண்மை தீர்வுகள், மறுசுழற்சி உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு, கரிமக் கழிவு சுத்திகரிப்பு மற்றும் உயிர் உரத் தீர்வுகள், சுற்றுச்சூழல் சேவைகள், தானியங்கு தீர்வுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த தொழில் தலைவர்கள், புதுமைப் படைப்பாளர்கள் மற்றும் பங்குதாரர்களை இந்த நிகழ்வுகள் ஒன்றிணைத்து, தொழில்துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சமீபத்திய போக்குகள், தொழில்நுட்பங்கள் மற்றும் நிலையான தீர்வுகளை ஆராய உதவுகின்றன.

இக்கண்காட்சியில் நீல்கமல் பபிள் கார்டு, கபார் இன்ஜினியரிங், புரோமெக் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், கேப்பிட்டல் கலர் அண்டு அடிடிவ்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (பி) லிமிடெட், பிளாஸ்மிக்ஸ் பிரைவேட் லிமிடெட், தக்ஷேன் லேசர் டெக், சௌத்ரி பிளாஸ்டிக்ஸ், இண்டஸ்ட்ரியல் ஏர் சொல்யூஷன்ஸ் எல்எல்பி (எல்ஜி), நோபல் ஏர் சொல்யூஷன், ரைட்சாய்ஸ் பிளாஸ்டிக் மெஷினரி (ஹைத்தான்), எவர்கிரீன் சார்ட்டிங் டெக்னாலஜிஸ், லுக் பிளாஸ்ட்கான் லிமிடெட் (பஜாஜ் பாலிமர்), அல்டிமேட் மோல்ட்ஸ் அண்டு ப்ராடக்ட்ஸ் மற்றும் உட்பட பலலவேறு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர், விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் தயாரிப்பு உற்பத்தியாளர்கள், பேக்கேஜிங் மற்றும் எப்எம்சிஜி தொழில், ஆட்டோமொபைல் மற்றும் பொறியியல் தொழில்கள், மறுசுழற்சி மற்றும் கழிவு மேலாண்மை நிறுவனங்கள், சிறு, குரு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள், சங்க உறுப்பினர்கள், இயந்திரங்கள் மற்றும் ஆட்டோமேஷன் வாங்குபவர்கள், சுற்றுச்சூழல் ஆலோசகர்கள் மற்றும் நிலைத்தன்மை நிபுணர்கள், தொழில்முனைவோர் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஆகியோர் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டிய ஒரு நிகழ்வு இதுவாகும்.

2026 நவம்பர் 27 முதல் 29 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைவருக்கும் பார்வையாளர் நுழைவு இலவசம்.

கண்காட்சியை ரிப்பன் மற்றும் குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்து கோயம்புத்தூர் சின்னவேடம்பட்டி தொழிற்துறை சங்கத்தின் தலைவர் என்.தேவகுமார் பேசியதாவது:-

தற்போதைய உலகத்தில் இன்றியமையாத விஷயம் பிளாஸ்டிக் பொருட்களை கையாள்வது எப்படி என்பது. இந்த சமுதாயத்துக்கும் இன்றையை தொழில் முனைவோருக்கும் இது ஒரு பெரிய சவாலா உள்ளது.கோயம்புத்தூரில் உள்ள தொழில் முனைவோர்கள் இந்த கண்காட்சியை பயண்படுத்தி மாடர்ன் டெக்னாலஜிஸ் உபயோகப்படுத்தி பிளாஸ்டிக்கை எவ்வாறு கையாள்வது? அதே போல் வேஸ்ட் பிளாஸ்டிக்கை எவ்வாறு ரீசைக்கிள் வெய்வது போன்ற விஷயங்கள் இக்கண்காட்சியல் இடம் பெற்றுள்ளன.

சிறந்த தொழில்நுட்பங்கள் நிறைய குஜராத், தெலுங்கானா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து வந்து கலந்துகொண்டுள்ளன.
நம்முடைய தொழில் துறை சுற்றுச்சூழல் மிகப்பெரிய அளவில் மாறுபாடுகள் கிடைக்கப்பட்டு நல்ல ஒரு தொழில் வளமும் அதே சமயம், பிளாஸ்டிக் தொழில்நுட்பம் சரியான முறையில கையாளும் பொழுது தொழில்துறை இன்னும் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்.

இந்த கண்காட்சியல் சுமார் 80-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் அவர்களுடைய மாடர்ன் டெக்னாலஜி மிஷினரிஸ்கள், பிளாஸ்டிக் பொருட்களை கையாளளும் விதத்தை தெரிந்து கொள்ள இது ஒரு சிறப்பான வாய்ப்பாக உள்ளது.
குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பிளாஸ்டிக் மற்றும் பாலிமர்ஸ் வகைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று விளக்கம் அளிக்கின்றார்கள்.

பிளாஸ்டிக்கை தவிர்ப்து என்பது முடியாது. சிறு நிறுவனம் நாள் ஒன்றுக்கு 20 முதல் 50 கிலோ வரை உபயோகப்படுத்துகின்றார்கள். இதன் மூலம் பிளாஸ்டிக் வேஸ்டுகள் உருவாகுகின்றன. எனவே வேஸ்ட் மேனேஜ்மென்ட் என்பது மிக முக்கியமான விஷயம் ஆகும். மத்திய மாநில அரசுகள் நிறைய முயற்சி செய்து அதற்கு தேவையான சலுகைகள் தருகின்றார்கள். நிறுவனங்கள் அதை முறையாக பயன்படுத்தி பிளாஸ்டிக் வேஸ்டுகளை ரீசைக்கிள் செய்யும் பொழுது, சமுதாயத்தில் கிடைக்கக்கூடிய மாசுகள் மிகப்பெரிய அளவில் குறையும்.

கோவிட் தொற்றுக்கு பின் பிளாஸ்டிக் உபயோகம் அதிகமாகி விட்டன, காரணம் பேக்கடு ஃபுட்ல முதல் அனைத்திற்கும் பிளாஸ்டிக் உபயோகம் அதிகமா உள்ளது. அதை நாம் குறைக்க முயற்சிக்க வேண்டும். துற்போது உள்ள பிளாஸ்டிக்குகளை கையாள்வதற்கு இந்த வேஸ்ட் மேனேஜ்மென்ட் கண்காட்சி மிகவும் உதவியாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க