• Download mobile app
26 Nov 2026, ThursdayEdition - 3942
FLASH NEWS
  • மாற்றம் மாற்றம் என்ற முதலமைச்சர் என்ன வெங்காயம் மாற்றம் செய்தார்..? – வி த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை கேள்வி
  • திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது – சௌமியா அன்புமணி வரவேற்பு
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய மருத்துவமனைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கே.எம்.சி.ஹெச் – கோவையின் நெ. 1 பல்துறை மருத்துவமனையாகத் தேர்வு

November 26, 2026 தண்டோரா குழு

இந்திய மருத்துவமனைகளில் செயல்திறனை ஆராய்ந்து அதனடிப்படையில் பிரபல ஆங்கில பத்திரிகையான தி வீக் வருடாவருடம் சர்வே நடத்தி வருகிறது.தி வீக் -ஹன்சா ரிசர்ச் சர்வே: இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகள் 2026 என்ற இதன் சமீபத்திய ஆய்வறிக்கையின்படி கேஎம்சிஹெச் மருத்துவமனை இந்த வருடத்திற்கான கோவையின் நெ.1 மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக கேஎம்சிஹெச் இந்த அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடுமையான ஆய்வுகள் மற்றும் போட்டிகளுக்கிடையே இந்த விருதையும் அங்கீகாரத்தையும் தொடர்ந்து பெற்றுவருவது தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.

தி வீக் பத்திரிகை சார்பில் புது டெல்லியில் நடைபெற்ற விழாவில் கேஎம்சிஹெச் மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி டாக்டர் J. சிவகுமரன் கோவையின் நெ. 1 மல்டிஸ்பெஷாலிட்டி ருத்துவமனை என்ற பெருமைமிகு விருதை,தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு,மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி.அருண்ராஜ் அவர்களிடம் பெற்றுக்கொண்டார்.

இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளை மதிப்பீடு செய்யும் தி வீக் – ஹன்சா ரிசர்ச் சர்வே நாட்டின் முக்கிய மருத்துவமையங்களாக விளங்கும் தலைநகரப் பகுதியையும் இந்தியா முழுவதும் தனது சர்வேவை மேற்கொண்டது.மக்கள் மத்தியில் பெற்றிருக்கும் நற்பெயர், மருத்துவர்களின் திறமை, உள்கட்டமைப்பு வசதிகள், ஆராய்ச்சி மற்றும் புதுமைகள், நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சேவை அளித்தல் ஆகிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சர்வே நடத்தப்பட்டது.

“தி வீக் ஹன்சா பத்திரிகையின் இந்த ஆய்வானது மருத்துவத் துறையினர் மத்தியில் மிகவும் செல்வாக்கு பெற்றது. எங்களது தனிச்சிறப்பு வாய்ந்த மருத்துவ சேவைக்கும், மருத்துவமனையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஊழியர்களின் திறமைக்கும் இந்த விருது ஒரு சிறந்த சான்றாகத் திகழ்கிறது. நகரில் நெ. 1 மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தொடர்ந்து ஒன்பதாவாது ஆண்டாக விருது பெறுவது என்பது மிகவும் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரிய விஷயமாகும்.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று, என்றும் நம்பிக்கைக்குரிய மருத்துவமனையாக திகழ்வதையே இந்த விருது சுட்டிக் காட்டுகிறது” என்று கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவரும் நிர்வாக இயக்குனருமாகிய டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தெரிவித்தார்.

மேலும் படிக்க