November 6, 2026
தண்டோரா குழு
தீபாவளியை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் வழங்கினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, முன்னாள் அமைச்சர் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல் படியும், மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி வழிகாட்டுதல் படி கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள்,ஓட்டுநர்கள்,வாட்டர் மேன் மற்றும் கழக உடன்பிறப்புகள் சுமார் 350 க்கும் மேற்பட்டவர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள்,பரிசு தொகை வழங்கினார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.அப்போது கார்த்திக் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானவர்கள் உடனிருந்தனர்.