• Download mobile app
05 Nov 2026, ThursdayEdition - 3921
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி மாணவர் இல்லத்தில் குதூகலமாய் தீபாவளியைக் கொண்டாடிய மாணவர்கள்!

November 5, 2026 தண்டோரா குழு

கோவை பி.எஸ்.ஜி மாணவர் இல்லத்தில் தங்கியுள்ள 217 குழந்தைகளுடன் இணைந்து,பி.எஸ்.ஜி & சன்ஸ் அறக்கட்டளை மற்றும் பி.எஸ்.ஜி மேலாண்மைக் கல்வி நிறுவன (PSGIM) மாணவர்கள் சார்பில் தீபாவளிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

பி.எஸ்.ஜி.அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இதில் இல்லத்தில் தங்கியுள்ள மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த புத்தாடைகளைத் தேர்வு செய்து அணிந்து மகிழ்ந்தனர்.தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும்,சிற்றுண்டிகள் மற்றும் சிறப்பு தீபாவளி விருந்தை உண்டும் உற்சாகமாகக் கொண்டாடினர்.

மேலும்,PSGIM மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் மாணவர்களுடன் இணைந்து கோவையைச் சேர்ந்த பல்வேறு தன்னார்வ அமைப்பினர்,பி.எஸ்.ஜி பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள்,பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் என ஏராளமானோர் பங்கேற்று நட்பு மற்றும் கலாசார ஒற்றுமையுடன் தீபாவளியைக் கொண்டாடியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

பி.எஸ்.ஜி.மேலாண்மை கல்லூரி மாணவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர்.கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தக் கொண்டாட்டம், குழந்தைகளுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதுடன், மாணவர்களிடையே சமூகப் பொறுப்பு, அன்பு மற்றும் பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்க்கும் நிகழ்வாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க