November 5, 2026
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ப்ரிகால் நிறுவனம் 2026-27 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டிற்கான தனது முடிவுகளை அறிவித்துள்ளது. இதில் 2வது காலாண்டில் இதன் செயல்பாட்டு வருவாய் ரூ.1,334.02 கோடியாகவும் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி 35.03 சதவீதமாகவும் உள்ளது.
இதேபோல் வரிக்கு பிந்தைய லாபம் ரூ. 85.21 கோடியாக உள்ளது.நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் செயல்பாட்டு வருவாய் ரூ.2,417.60 கோடியாக ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி: 29.59 சதவீதமாகவும், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.152.23 கோடியாகவும் உள்ளது. இது கடந்த ஆண்டு இதே அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 33.68 சதவீத வளர்ச்சியாகும்.
வாடிக்கையாளர் நம்பிக்கை, பிராண்ட் மதிப்பு மற்றும் நீண்ட கால பங்குதாரர் உறவுகளை உருவாக்கும் இந்நிறுவனத்தின் சிறந்த செயல்பாட்டை பிரதிபலிக்கும் விதமாக ஈடி எட்ஜ் ஐகானிக் பிராண்ட்ஸ் ஆப் இந்தியா விருதுகளில் “2026 ஆம் ஆண்டின் இந்தியாவின் ஐகானிக் பிராண்டுகளில்” ஒன்றாக ப்ரிகால் அங்கீகரிக்கப்பட்டது.
வாடிக்கையாளரின் உற்பத்தித் தேவைகளை ஆதரிக்கும் திறனை அங்கீகரித்து, டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திடமிருந்து “சிறந்த உற்பத்தி ரேம்ப்-அப் ஆதரவுக்கான விருதை”யும் இந்நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் பிசி75/பிசி81 ஹைட்ராலிக் எக்ஸ்கவேட்டருக்கான 7-இன்ச் டிஎஃப்டி கிளஸ்டரின் வெற்றிகரமான உள்ளூர்மயமாக்கலை அங்கீகரித்து, 2025-26ம் நிதி ஆண்டுக்கான “உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் உதிரிபாகங்கள் மேம்பாட்டில் சிறந்து விளங்கியதற்காக” இந்நிறுவனத்தை கோமாட்சு இந்தியா நிறுவனம் கவுரவித்து பாராட்டி உள்ளது.
ஏத்தர் எனர்ஜியின் வருடாந்திர சப்ளையர் சந்திப்பில், வாடிக்கையாளர் ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைக்கான நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில், ப்ரிகால் பிரிசிஷன் “ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கான மதிப்புமிக்க கூட்டாண்மை” விருதையு பெற்றுள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் விக்ரம் மோகன் கூறுகையில்,
“மாறிவரும் வணிக இயக்கவியல் மற்றும் சந்தைத் தேவைகளுக்கு மத்தியில், செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்துதல், செலவுகளை கட்டுப்படுத்துதல் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றில் எங்கள் கவனம் தொடர்கிறது. எதிர்காலத் தேவைகள் மற்றும் வணிகத்தின் முன்னுரிமைகளை மனதில் கொண்டு, தொழில்நுட்ப முன்னேற்றம், தயாரிப்பு மேம்பாடு, தரம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, வளர்ந்து வரும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள் மற்றும் தொழில் முன்னேற்றங்களுக்கு ஏற்ப எங்களது உத்திகளை நாங்கள் தொடர்ந்து மாற்றியமைத்து வருகிறோம். மாறிவரும் வணிகச் சூழலுக்கு ஏற்ப நாங்கள் செயல்பட்டு வருகிறோம்” என்று தெரிவித்தார்.