• Download mobile app
02 Nov 2026, MondayEdition - 3918
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசியாக முடிசூட்டப்பட அழைக்கப்பட்டவர்கள்”என்ற கருப்பொருளில் சிஎஸ்ஐ கோவை திருமண்டல மகளிர் ஐக்கியம் சார்பில் அமைதிப் பேரணி – 1,500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு!

November 2, 2026 தண்டோரா குழு

கோவையில் சிஎஸ்ஐ கோவை திருமண்டல மகளிர் ஐக்கியம் சார்பில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் 1,500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

பெண்களின் ஆன்மிக வளர்ச்சி, ஒற்றுமை, தலைமைத்துவம் மற்றும் சமூகப் பங்களிப்பை வலியுறுத்தும் வகையில், சிஎஸ்ஐ கோவை திருமண்டல மகளிர் ஐக்கியத்தின் சார்பில், “அரசியாக முடிசூட்டப்பட அழைக்கப்பட்டவர்கள்” (Called to Be Crowned) என்ற கருப்பொருளில் மகளிர் மாநாடு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ ஆல் சோல்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு உப்பிலிபாளையத்தில் உள்ள சிஎஸ்ஐ இம்மானுவேல் தேவாலயத்தில் இருந்து மகளிர் பங்கேற்ற அமைதிப் பேரணி நடைபெற்றது. கோவை திருமண்டல பிஷப் அருட்திரு ஆர்.டி. ரெவ. எஸ். பிரின்ஸ் கால்வின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியை கோவை திருமண்டல மகளிர் ஐக்கியத் தலைவர் ஐடா கால்வின் மற்றும் சென்னை திருமண்டல மகளிர் ஐக்கியத் தலைவர் அருட்திரு இந்திரா பால் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

இதில் கோவை,திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே மாதிரியான சீருடை அணிந்து திரளாகப் பங்கேற்றனர். பேரணியில் பெண்களின் தலைமைத்துவம், சமூகப் பங்களிப்பு,ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

தொடர்ந்து நடைபெற்ற மகளிர் மாநாட்டில் கோவை திருமண்டல பிஷப் அருட்திரு எஸ். பிரின்ஸ் கால்வின் தலைமை வகித்தார்.
மகளிர் ஐக்கியத் தலைவர் ஐடா கால்வின் முன்னிலை வகித்தார்.சென்னை திருமண்டல மகளிர் ஐக்கியத் தலைவரும், பிஷப் அம்மா என அழைக்கப்படுபவருமான அருட்திரு இந்திரா பால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பேராயரம்மா ஐடா கால்வின்,

கோவை,திருப்பூர்,நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் மாநாட்டில் பங்கேற்றதாகத் தெரிவித்தார்.பெண்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அவர்களின் ஆளுமை மற்றும் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்துவது குறித்து மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டதாகக் கூறினார்.

மேலும்,கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பெண்களின் முன்னேற்றம் மற்றும் விழிப்புணர்வுக்காக தமிழக முதல்வர் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகளிர் ஐக்கியத் தலைவர் ஐடா கால்வின், துணைத்தலைவர் சங்கீதா பிரபுதாஸ், செயலாளர் கலைமணி பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேலும், சிஎஸ்ஐ கோவை திருமண்டல செயலாளர் அருட்திரு ராஜா, துணைத்தலைவர் விமல், பொருளாளர் அருட்திரு டேவிட் பர்னபாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க