• Download mobile app
16 Oct 2026, FridayEdition - 3901
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவில் முதல் முறையாக ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு குடும்பத் திட்டம் வி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம்

October 16, 2026 தண்டோரா குழு

அர்த்தமுள்ள மற்றும் பயனுள்ள பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாகுபாடின்றிச் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நம்பிக்கையின் அடிப்படையிலேயே ‘ வி -யில் அனைவரும் விஐபி’ என்ற தாரக மந்திரம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

தனது இந்த வாக்குறுதியை நனவாக்கும் வகையில், நாட்டின் வழக்கமான ப்ரீபெய்ட் திட்டங்களை மறுவரையறை செய்யும் இந்தியாவின் முதல் ‘ வி ப்ரீபெய்ட் குடும்பத் திட்டத்தை’ வி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய வி ப்ரீபெய்ட் குடும்பத் திட்டம் அறிமுகம் குறித்து வி நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி தெரிவிக்கையில்,

குடும்பத்தில் எவருக்கேனும் தினசரி டேட்டா தீர்ந்துபோகும் அவசரச் சூழல்களில், மற்ற உறுப்பினர்கள் தங்களது உபரி டேட்டாவை உடனடியாகப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மூலம், வழக்கமான ப்ரீபெய்ட் அனுபவத்தை இத்திட்டம் முற்றிலும் புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நவீன டிஜிட்டல் உலகில், மொபைல் இணையத் தரவு தீர்ந்துபோவது என்பது ஒரு முக்கியமான அலுவலக காணொலிக் கூட்டத்தைத் தவறவிடுவதற்கோ, மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகள் தடைபடுவதற்கோ, வழிகாட்டும் மேப் வசதியின்றிப் பயணங்களில் தவிப்பதற்கோ அல்லது அத்தியாவசிய செயலிகள் மற்றும் சேவைகளை பெற முடியாமல் போவதற்கோ காரணமாகிவிடுகிறது. மொபைல் டேட்டாவையும் குடும்பத்தினர் பகிர்ந்துகொள்ளும் பொது வளமாக மாற்றி, புதிய ’ வி ப்ரீபெய்ட் குடும்பத் திட்டம்’ ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வி செயலியைப் பயன்படுத்தும் அனைத்து வி ப்ரீபெய்ட் சந்தாதாரர்களும் தங்களது வி செயலி மூலம் அதிகபட்சமாக நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பக் குழுவை உருவாக்கிக் கொள்ளலாம். இதில் குழுவை உருவாக்கும் வாடிக்கையாளர் முதன்மை உறுப்பினராகவும் , அவருடன் அதிகபட்சமாக மூன்று பேர் துணை உறுப்பினர்களாகவும் இணைக்கப்படலாம். இத்திட்டத்தின் கீழ் இணையும் ஒவ்வொரு உறுப்பினரும் தங்களது சொந்த ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் செல்லுபடியாகும் காலத்தை) எவ்வித மாற்றமுமின்றித் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வர்.

அதேவேளையில், குடும்ப உறுப்பினர்களிடையே டேட்டாவைப் பகிர்ந்து இணைப்பில் இருக்க உதவும் கூடுதல் வாய்ப்பைப் பெறமுடியும்.வி ப்ரீபெய்ட் குடும்பக் குழுவில் உள்ள உறுப்பினர்கள், குடும்பத்தில் எவருக்கேனும் டேட்டா தீர்ந்துபோகும் அவசரச் சூழல்களில், அவர்கள் தொடர்ந்து இணைய இணைப்பில் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் ஒரு முறைக்கு 500 எம்பி வீதம் இணையத் தரவை உடனடியாகப் பகிர்ந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்குடும்பக் குழுவில் இணையும் ஒவ்வொரு உறுப்பினரும், தங்களது வி செயலி வாயிலாக மேற்கொள்ளும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் ரீசார்ஜுக்கும் 10% வரை உத்தரவாதமான தள்ளுபடியைப் பெற்றுப் பயன்பெறலாம்.

மேலும் படிக்க