October 13, 2026
தண்டோரா குழு
மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் கோவை கே.எம்.சி.ஹெச்.(KMCH) மருத்துவமனை கட்டிடம் முழுவதும் பிங்க் நிற ஒளியில் (Pink Light Theme) அலங்கரிக்கப்பட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் 2026 அக்டோபர் 5 முதல் நவம்பர் 5 வரை, தினமும் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில், மார்பகப் புற்றுநோய் தொடர்பான மருத்துவ ஆலோசனைக் கட்டணத்திலும், மேமோகிராம் (Mammogram) பரிசோதனை 50 சதவீதச் சலுகை கட்டணத்திலும் வழங்கப்படுகிறது.
மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது சிகிச்சை வெற்றிக்கான வாய்ப்புகளை மேம்படுத்த உதவும். மார்பகத்தில் ஏதேனும் அசாதாரண மாற்றங்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவதும், மருத்துவர்களின் பரிந்துரைப்படி தேவையான பரிசோதனைகளை மேற்கொள்வதும் அவசியம்.
பெண்களிடையே விழிப்புணர்வை அதிகரித்து, ஆரம்பகாலக் கண்டறிதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி மற்றும் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி ஆகியோரின் வழிகாட்டுதலில் இந்த விழிப்புணர்வு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
முகாம் நடைபெறும் நாள் அக்டோபர் 5 முதல் நவம்பர் 5, 2026 வரை
நேரம்: தினமும் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை
இடம்: கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை, அவிநாசி சாலை,கோவை,
தொடர்புக்கு: 74188 87411.
மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வைப் பெறவும், உரிய மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் பெண்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை கேட்டுக்கொள்கிறது.