• Download mobile app
10 Oct 2026, SaturdayEdition - 3895
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுரங்கத் துறையில் புதிய டிஜிட்டல் புரட்சி: எதிர்கால ‘டிஜிமைன்’ உருவாக்க ‘ வி பிசினஸ்’ – ‘ஹிண்டால்கோ’ இடையே உத்திசார் அதிரடி கூட்டணி!

October 10, 2026 தண்டோரா குழு

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ‘வி -யின் வணிகப் பிரிவான ‘ வி’ பிசினஸ்’, அலுமினியம் மற்றும் செம்பு உற்பத்தியில் உலக அளவில் கொடிகட்டிப் பறக்கும் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு பிரம்மாண்ட புதிய கூட்டு செயல்பாட்டை மேற்கொள்கிறது.

இந்தக் கூட்டு செயல்பாடு குறித்து ‘ வி’ பிசினஸ்’-ன் சீஃப் எண்டர்பிரைஸ் பிசினஸ் அதிகாரி. எம். பி. சுனில் குமார் பேசுகையில்,

“ஹிண்டால்கோ நிறுவனத்துடன் இணைந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தைத் தொடங்குவதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி! இவ்வளவு பெரிய, சவாலான சுரங்கச் சூழலிலும் துல்லியமாகச் செயல்படும் பிரத்தியேக பிரைவேட் நெட்வொர்க்கை அமைத்துத் தருவதில் எங்களின் அதிநவீன என்ஜினீயரிங் தொழில்நுட்பம் எவ்வளவு பலமானது என்பதை இந்தத் திட்டம் உலகிற்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் அமைந்துள்ள ஹிண்டால்கோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பாப்ளிமாலி பாக்சைட் சுரங்கத்தில்’ அதிநவீன பிரைவேட் நெட்வொர்க்கை நிறுவுவதற்காக இந்த உத்திசார்ந்த கூட்டு செயல்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிண்டால்கோவின் அலுமினிய உற்பத்திக்குத் தேவையான மிகத் தரமான பாக்சைட்டை வழங்கும் பிரதான மையமாக இந்த பாப்ளிமாலி சுரங்கம் விளங்கி வருகிறது.

இந்நிலையில், ஒருங்கிணைந்த, புத்திசாலித்தனமான மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற சுரங்கங்களை உருவாக்கும் ஹிண்டால்கோவின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப சுரங்கப் பணிகளை முழுமையாக டிஜிட்டல்மயமாக்கி, ‘இண்டஸ்ட்ரி 4.0’ தொழில்நுட்பப் புரட்சியை நோக்கி நடைபோடும் ஹிண்டால்கோவின் வரலாற்றில், முதன்முறையாகக் களமிறக்கப்படும் பிரைவேட் நெட்வொர்க் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிநவீன இணைப்புத் தொழில்நுட்பத்தின் மூலம் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு, மிகச் சிறந்த முறையில் எதிர்காலத்திற்கு ஏற்ற ‘ஸ்மார்ட் சுரங்கமாக’ இதனை மாற்றுவதற்கு இக்கூட்டு செயல்பாடு ஒரு பலமான அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்துள்ளது! பல ஆண்டுகளுக்கு நிர்வகிக்கப்படும் சேவைகளுக்காக திட்டமிடப்பட்டுள்ள (இந்த மாபெரும் ஒப்பந்தத்தின் கீழ், அலைக்கற்றை முதல் கோர் , ரேடியோ பயன்படுத்தும் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு சேவைகள் வரை அத்தனையையும் உள்ளடக்கிய முழுமையான பிரைவேட் நெட்வொர்க் கட்டமைப்பை ‘வி’ பிசினஸ்’ வழங்குகிறது.

இது ஹிண்டால்கோவின் சுரங்கப் பணிகளுக்கு ஒரு வலுவான டிஜிட்டல் முதுகெலும்பாக மாறி, நிலத்தடி மற்றும் நிலப்பரப்பு முழுவதும் துளிக்கூடத் தடையற்ற, அதிரடியான அதிவேக நெட்வொர்க் இணைப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்! ” வி’ -யின் இந்த பிரைவேட் நெட்வொர்க் பலத்தால், சுரங்கத்தில் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பு, வாகனங்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் ஃபிளீட் மேனேஜ்மென்ட் , வானில் பறந்து கண்காணிக்கும் ட்ரோன்கள், சிசிடிவி நெட்வொர்க் மற்றும் நொடிக்கு நொடி நடக்கும் வேலைகளைத் துல்லியமாகக் கண்காணிக்கும் ‘ரியல் டைம் மானிட்டரிங்’ என ஏகப்பட்ட நவீனத் தொழில்நுட்பங்கள் களமிறக்கப்பட உள்ளன.

எல்லாவற்றிற்கும் மேலாக, சுரங்கத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் ஒரே இடத்தில் இருந்து கவனித்துத் துல்லியமான முடிவுகளை எடுப்பதற்காக ஒரு பிரம்மாண்டமான ‘ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம்’ உருவாக்கப்படுகிறது. இதன்மூலம், தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பிற்கு 100% உத்திரவாதம் கிடைப்பதோடு, சுரங்கத்தின் உற்பத்தியும் அடுத்த கட்டத்திற்கு உயர வழிவகுக்கப்படுகிறது.

நூற்றுக்கு நூறு பாதுகாப்பு, அசைக்க முடியாத நம்பகத்தன்மை மற்றும் அதிவேக செயல்திறன் ஆகியவற்றை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நெட்வொர்க், சுரங்கப் பணிகளை நாளுக்கு நாள் மிக எளிதாகவும், பாதுகாப்புடனும், படுவேகமாகவும் மாற்றுவதற்குத் தேவையான ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் என்றார்.

மேலும் படிக்க